search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைவர்கள் கருத்து"

    நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பற்றி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். #Results2018
    புதுடெல்லி:

    5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பற்றிய தலைவர்களின் கருத்துகள் வருமாறு:-

    சந்திரபாபு நாயுடு:- மக்களின் தீர்ப்பை மதிக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான மாற்று அணி அமைக்க இம்முடிவுகள் வழிவகுக்கும்.

    சந்திரசேகர ராவ்:- இந்த வெற்றியை தெலுங்கானா மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். தேசிய அரசியலில் நாங்கள் மிக முக்கிய பங்கு வகிக்க போகிறோம்.

    மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்):- ஆட்சி மிக மிக மோசமாக இருந்ததே பா.ஜனதாவின் தோல்விக்கு காரணம். பா.ஜனதா கோட்டை என்று சொல்லப்படும் 3 மாநிலங்களிலுமே மோடிக்கு ஆதரவு குறைந்தநிலையில் அவர் இனி எங்கே ஜெயிக்கப் போகிறார்?

    டி.ராஜா (இந்திய கம்யூ.):- இந்த முடிவுகள், நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதாவுக்கு பின்னடைவை கொடுக்கும்.

    கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி (ஜனதாதளம்-எஸ்):- சோனியா, ராகுல் காந்தி மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைத்துள்ளது. மதவாத சக்திகளை வீழ்த்த மதச்சார்பற்ற கட்சி தலைவர்கள் ஓரணியில் திரள வேண்டிய நேரம் வந்து விட்டது.

    சித்தராமையா (காங்கிரஸ்):- ஆணவம் மிகுந்த பா.ஜனதாவை மக்கள் நிராகரிப்பார்கள் என்பதை இம்முடிவு உணர்த்துகிறது. எல்லா மதச்சார்பற்ற தலைவர் களும் ஓரணியில் திரள வேண்டும்.

    உத்தவ் தாக்கரே (சிவசேனா):- தாங்கள் விரும்பாத ஆட்களை மக்கள் துணிச்சலாக நிராகரித்து உள்ளனர். அவர்களின் துணிச்சலை பாராட்டுகிறேன்.

    சஞ்சய் ராவத் (சிவசேனா):- பா.ஜனதாவுக்கு தெளிவான சமிக்ஜை விடப்பட்டுள்ளது. அக்கட்சி சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது.

    அஜித் ஜோகி (ஜனதா காங்கிரஸ்):- பா.ஜனதாவுக்கு வீழ்ச்சியை தந்துள்ள இத்தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
    உச்ச நீதிமன்றத்தால் கர்நாடக அரசியலில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதேபோல் பல்வேறு கட்சி தலைவர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர். #KarnatakaElection #YeddyurappaResign
    புதுடெல்லி:

    கர்நாடக சட்டசபையில் இன்று உணவு இடைவேளைக்கு பிறகு அவை கூடியது. எடியூரப்பா தனது உணர்ச்சிமிகு உரையில், உயிர் உள்ளவரை விவசாயிகளுக்காக பாடுபடுவேன் என்றார்.

    தனது பேச்சை முடித்ததும், எடியூரப்பா தனது ராஜினாமா முடிவை அறிவித்தார். அப்போது அங்கிருந்த காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் ஒருவருக்கொருவர் தங்கள் கைகளை குலுக்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

    இந்நிலையில், கர்நாடக அரசியலில் திடீர் திருப்பமாக எடியூரப்பா முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தது குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா ராஜினாமா செய்ததால் ஜனநாயகம் பிழைத்தது என்று மகிழ்ச்சி அடைவோம் என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், சதி வீழ்த்தப்பட்டது. கர்நாடகாவிற்கு இது வெற்றி. பாஜக வீழப் போவதற்கான நேரம் ஆரம்பமாகிவிட்டது என்றார்.



    இது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், எடியூரப்பா ராஜினாமா செய்ததன் மூலம் ஜனநாயகம் மீது நம்பிக்கை உள்ளவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்றார்.

    மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறுகையில், ஜனநாயகம் வெற்றி பெற்றதற்கு கர்நாடக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 

    இதேபோல், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், உச்ச நீதிமன்றத்தால் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது. குமாரசாமிக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். #KarnatakaElection #YeddyurappaResign 
    ×